UNPKG

@mdkva/surahkit

Version:

MDKVA SurahKit provides clean, reliable, and easily accessible Quran data ideal for apps, Islamic tools, AI systems, and automation projects.

32 lines 5.64 kB
[ { "id": "1", "surah": "The Opener", "verses": "1-7", "text": "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஓதுகிறேன் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன்தான் அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன். அவன்தான் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே. அல்லாஹ்வே! நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! அவ்வழி எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல." }, { "id": "103", "surah": "The Decline Day", "verses": "1-3", "text": "காலத்தின் மீது சத்தியமாக! தன் ஆயுளை வீணில் செலவு செய்து நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர இவர்கள் நஷ்டமடையவில்லை." }, { "id": "112", "surah": "The Sincerity", "verses": "1-4", "text": "நபியே! மனிதர்களை நோக்கி கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான். அந்த அல்லாஹ் எவருடைய தேவையுமற்றவன். அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன. அவன் எவரையும் பெறவுமில்லை; எவராலும் பெறப்படவுமில்லை. ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை. தவிர அவனுக்கு ஒப்பாகவும் நிகராகவும் ஒன்றுமில்லை." }, { "id": "113", "surah": "The Daybreak", "verses": "1-5", "text": "நபியே! நீர் பிரார்த்தனை செய்து கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன். அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும், அனைத்தையும் மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும், முடிச்சுப் போட்டு ஊதும் சூதுக்கார பெண்களின் தீங்கைவிட்டும், பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் பாதுகாக்கக் கோருகிறேன்." }, { "id": "114", "surah": "The Mankind", "verses": "1-6", "text": "நபியே! பிரார்த்தனை செய்து கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன். அவன்தான் மனிதர்களின் உண்மையான அரசன். அவனே மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். மனிதர்களுடைய உள்ளங்களில் வீணான சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் பாதுகாக்கக் கோருகிறேன். அத்தகைய விஷமிகள் ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்." } ]